உடலில் வயிறு, இடுப்பு போன்ற பகுதிகள் மட்டு பெருத்து உடலின் தோற்றம் பார்க்க மெல்லியதாக இருந்தாலும் அதுவும் உடல் பருமனுக்கான அறிகுறியே என்று சொல்லலாம்.
உடலை பிட்டாக வைத்திருக்கும் பெண்களுக்கு கூட வயிறு தொப்பை விழுவதைத் தடுக்க முடிய வில்லை என்ற கவலை இருக்கும்.முன்பெல்லாம் பெண்கள் துணி துவைக்கும் போது குனிந்து நிமிர்ந்து துணி அலசினார்கள். வீட்டைப் பெருக்கி துடைத்தார்கள்.
இப்போது எல்லாமே நின்றபடி செய்வதால் வயிறு இயல்பாகவே பெருத்து விடுகிறது. என்ன செய்தால் தொப்பை இல்லாத அழகிய வயிறை பெறலாம். கடுமையான உடற்பயிற்சி செய்தால் தொப்பை குறையாது.
கடுமையான டயட்டைப் பின் தொடர்ந்தால் அப்போதும் குறையாது. இரண்டையும் ஒன்றாக செய்யும் போது நிச்சயம் தொப்பை குறையும். சரி வாங்க தொப்பையை குறைக்கும் சில டிப்ஸ்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்..