வீட்டில் இருந்தே ஒய்வு நேரங்களில் செய்ய கூடிய ஒரு சிறந்த தொழில் தான் குளியல் சோப்பு (skin soap) தயாரிப்பு.
அதுவும் பெண்கள் ஒய்வு நேரங்களில் மிக எளிதில் செய்யக்கூடிய தொழிலாக இது விளங்குகிறது. இந்த தொழில் துவங்குவதற்கு இட வசதியோ, அதிக முதலீடோ மற்றும் வேலை ஆட்களோ தேவையில்லை.
சோப்பு பயன்படுத்திக் குளிப்பதைவிட, இப்போது பெரும்பாலான மக்கள் லிக்யுட் சோப் தான் பயன்படுத்துகிறார்கள். அதற்காக பார் சோப்பை மறந்து விடக்கூடாது.
குளிப்பதற்கு நீங்கள் பயன்படுத்தினாலும் படுத்தாவிட்டாலும் அந்த சோப்பை குளிப்பதற்கு மட்டுமல்லாது இன்னும் நிறைய விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம். அதை கொண்டு ஆச்சரியம் தரும் வகையில் நம் வீட்டின் பல தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.