முருங்கை இன்று மிகவும் பிரபலமடைந்து வரும் ஒரு உணவுப்பொருள். இது பிரபலமடைய காரணம், இதில் உள்ள ஏராளமான சத்துக்கள் தான். இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை உள்ளன. இது நமது ஊரில் அதிகளவில் நிறைந்துள்ள ஒரு மரம்.
இது சர்க்கரை நோய், இருதய நோய்கள், இரத்த சோகை, ஆர்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய், தோல் மற்றும் ஜீரண கோளாறுகளை போக்க கூடியது. முருங்கையின் காய்கள்கள், வேர்கள், பட்டை, மலர்கள், விதைகள் கூட சாப்பிட தகுந்ததாக உள்ளது.
முருங்கை மரத்தினுடைய எல்லா பாகங்களும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முருங்கையின் பூக்கள் உடலுக்கு உரத்தைத் தரவல்லவை. மாதவிலக்கைத் தூண்டி ஒழுங்குபடுத்தக்கூடியது.
வேர்ப்பட்டை தொற்று நோய்க்கிருமிகளைத் துரத்த வல்லது. வீக்கத்தைக் கரைக்க வல்லது. வலியைத் தணிக்கக்கூடியது. முருங்கைப்பட்டை பூஞ்சைக் காளான்களைப் போக்கவல்லது.