மாத்தளையில் தகாத உறவால் கடத்தல் மற்றும் கொடூர தாக்குதல்: விசாரணை மும்முரம்
மாத்தளை பிரதேசத்தில் கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தது காரணமாக சித்திரவதை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கடத்தப்பட்டு, காட்டுப்பகுதியில் உள்ள பாறைக்கு அருகில் கொண்டு சென்று கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர் என்று நம்பி, சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
பொலிஸார் விரைவாக நடவடிக்கை எடுத்து பியகம மற்றும் லக்கல பகுதிகளில் மறைந்திருந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். ஆரம்ப விசாரணைகளின் படி, இந்த கடத்தல் 1 மில்லியன் ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாடகை வாகனம் ராகம பகுதியில் இருந்து வந்ததாகவும், முக்கிய சந்தேக நபர் லக்கல பகுதியைச் சேர்ந்த டிப்பர் லொறி சாரதி எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான இரண்டு பேரும் தற்போது மாத்தளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்வதாக மாத்தளை தலைமையகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Tags
Local News