யாழில் மாடுகள் கடத்தல்: நபர் கைது மற்றும் மாடுகள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து அனுமதியின்றி மாடுகளை சட்டவிரோதமாக கடத்தி சென்ற ஒரு நபரை சாவகச்சேரி பொலிஸார் திங்கட்கிழமை (24.02.2025) இரவு கைது செய்துள்ளனர். இதன் மூலம் 18 மாடுகளை உயிருடன் மீட்டதுடன், மாடுகள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டிருந்த பாரவூர்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமாக மாடுகள் கடத்தப்படுவதாக இரகசிய தகவலின் அடிப்படையில் சாவகச்சேரி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் வீதியில் பயணித்த பாரவூர்தியை மறித்து சோதனை செய்த போது, அதன் உள்ளே 18 மாடுகள் மிகவும் நெருக்கமான நிலையில் அடைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த பாரவூர்தி, மாடுகளை கடத்துவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, காற்று வருவதற்காக மேல் பகுதிகளில் சில இடங்கள் விலக்கப்பட்டிருந்ததுடன், மாடுகளை கட்டி வைப்பதற்காக கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பாக கைதான நபரை சாவகச்சேரி பொலிஸார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post